ஞாயிறு, 19 நவம்பர், 2017

அரசியலோடு நான் 1

இப்போதல்லாம் தொடர்ந்து அரசியல் பற்றி எழுதுகிறேன்.

திராவிட கருத்தியல் சார்ந்த அரசியலை எழுதி,அதை என் நண்பர்கள் அனேகம் பேர் வாசிக்கிறார்கள் என அறிந்த போதும், சிலர் தயக்கம் நீங்கி விவாதம் செய்யவும் தொடங்கி இருப்பதிலும்  எனக்கு பெரும் மகிழ்ச்சி.


மேலும் எனது பள்ளி மற்றும் கல்லூரி கால நண்பர்கள் நேரில் பார்க்கும்போதும்,போனில் நலம் விசாரிக்கும் போதும் தவறாமல் இந்த சமூகவலைதள எழுத்து குறித்து என்னிடம் விவாதிக்கின்றனர்.


சிலர் அன்பாக மிரட்டி அரசியல் எல்லாம் நமக்கு எதுக்கு என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள்


சமீபத்தில் என்னிடம் அவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி


"நீ" எப்படிப்பா இவ்வளவு தீவிரமான  பெரியார் ஆதரவாளர் ஆன? என்பதுதான்.


மத வாத சக்திகளின் அரசியலை எதிர்க்க வேண்டிய தேவை பற்றியும் இந்தியாவில் இருக்கும் மதசார்பற்ற தலைவர்களில் முக்கியமானவரான பெரியாரை, அவரது பகுத்தறிவு அரசியலை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் எடுத்து சொன்னேன்.


ஏனோ அதில் எனக்கு முழு திருப்தி இல்லை.  


அவர்களிடம் சொல்ல தவறிவிட்ட சில விசயங்களையும்  சேர்த்து இப்போது எழுதி வைக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்கள் நிச்சயம் வாசிப்பார்கள்.


Blog (முகநூலும்) என்பது Diary மாதிரி ஆகி விட்டது. பின்னாளில் எனக்கே கூட ஞாபகபடுத்தும் விசயமாக இருக்கும் என்பதாலும் இந்த நீண்ட பதிவு


ஆக கொஞ்சம் சுயபுராணம் மாதிரி இருக்கும், நேரம் இருப்பவர்கள் படியுங்கள். 


இளமையில் என்னை போன்றோர் அரசியல் விழிப்புணர்வு இல்லாது தவிக்க அவர்களை போன்றோரை எப்படி விழிப்புற செய்வது, பார்ப்பனிய சமூகம் எப்படி அவர்களை வளைத்து வளர்கிறது என்பதை போன்ற ஆய்வுகளை செய்பவர்களுக்கு உதவியாக கூட இருக்கலாம்.


என் நினைவுகளை ஒவ்வொரு வருடமாக பின்னோக்கி கடத்தி என் ஞாபகங்களில் இருக்கும் என்னுடைய தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் அரசியல் செய்திகளை ஒட்ட வைத்தும், தகவல்கள் குறித்த இடைவெளியை ஹூகுள் உதவி கொண்டு நிரப்பி கொண்டே வந்துதான் இந்த பதிவை எழுத முடிந்தது. சிற்சிலவை விடுபட்டு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.


அந்நாட்களில் இப்போது மாதிரி எழுதும் பழக்கம் எனக்கு இல்லையே தவிர , ஓயாது சம காலத்து நிகழ்வுகளை குறித்து விவாதிக்கும்/கலந்துரையாடல் செய்யும் பழக்கம்  உண்டு.


விவாதங்கள் எனக்கு பல நண்பர்களை சேர்த்து கொடுத்திருந்தது, தீவிரமான விவாதங்கள் சில நண்பர்களின் ”நண்பர் பட்டியலில் ”இருந்து என்னை நீக்க செய்துஇருக்கிறது, சிலர் என்னை ப்ளாக் பண்ணியும் இருக்கிறார்கள். நானும் சிலரை விலக்கி இருக்கிறேன்.


எண்ணி பார்த்தால்  நம் சமூகமே முகநூல் மாதிரிதான் இயங்குகிறது, அல்லது சமூகம் இயங்குவதை தத்துருவமாக இணையதளத்தில் கொண்டு வந்து இருக்கிறார் மார்க் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஜூன் 2,2017 , நான் பேங்களூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி  பேரூந்தில் போய் கொண்டிருந்தேன்..


சில நாட்களாகவே முகநூலில் உடன்பிறப்புகளும், எழுத்தாளர்களும் ,ஆளுமை மிக்க FB பதிவர்களும் கலைஞரின் வைரவிழாவை ஒட்டி பல்வேறுபட்ட வரலாற்று பதிவுகளை எழுதி குவித்து கொண்டிருந்தார்கள், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி நாமும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று முகநூல் வரும்போதல்லாம் ஏதோ ஒரு முக்கிய முகநூல் பதிவர் எழுதி இருக்கும் கலைஞர் பற்றிய பதிவு கண்ணில் படும் வாசிப்பேன்...


கலைஞர் பற்றிய செய்திகள்தானே தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலுமே... அதை ஒட்டிய நிகழ்வோடு நான் அந்த கால கட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று மனம் பின்னோக்கி அலைபாயும்.


அந்நாளிலே புலிகளை பற்றியும் ,RSS அரசியலை பற்றியும் பேசிய நிஜ திண்ணை/குட்டிசுவர் விவாதங்களை நினைத்து சிலாகித்து மனம் பாரட்டவும் செய்யும், சிலவற்றில் ச்சே நம்ம எத்தனை மோசமான நிலைப்பாடுகளுடன் இருந்தோமே என்றும் திட்டும்.


அப்படி ஒரு மோசமான நிகழ்வுதான் முதன் முதலாக தேர்தலில் நான் ஓட்டளித்தது, ஆம் என்னுடைய முதல் ஓட்டு இரட்டை இலைக்குதான் :(


சம்பவம் நடந்தது 2001ல்


-சொல்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக